டுவிட்டரில் தனுஷின் ஜகமே தந்திரம் படைத்த உலகளாவிய சாதனை

நடிகர் தனுஷ் கேங்ஸ்டராக நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 18ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. அதோடு டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதில் ஜகமே தந்திரம் படக்குழுவினர், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

தனுஷ்

உலகளவில் இதுவரை டுவிட்டர் ஸ்பேசில் ஒரு நிகழ்ச்சியில் 17 ஆயிரம் கலந்துகொண்டதே சாதனையாக இருந்தது. தற்போது ஜகமே தந்திரம் படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு ஆர்ம் ஆப் தி டெட் படத்திற்காக 17 ஆயிரம் பேர் கலந்துகொண்டதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.