24 வயதே ஆன இரட்டை சகோதரர்கள் கொரோனாவுக்கு பலி

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரேமன்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி  எனப் பெயர் கொண்ட அந்த  இரட்டை சகோதரர்கள் ஒரே மாதிரியாக இஞ்சினியரிங் படித்துவிட்டு, ஐதராபாத்தில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்த இவர்கள் உடல்நிலை கடந்த சில தினங்களுக்கு முன் மோசமானதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரட்டையர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.