‘கொரோனா தேவி’ கோயில் கட்டி வழிபடும் மக்கள்..... இந்த கோயில் எங்குள்ளது தெரியுமா?

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை இருகூர் பகுதியில் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கொரோனா மாரியம்மன் கோவிலை கட்டி உள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ‘இதற்கு முன் அம்மை, காலரா போன்ற நோய்கள் ஏற்பட்ட போது மக்கள் பலர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். வேப்பிலை கும்பங்களும், நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம் பிற்காலத்தில் கோயிலாக மாறியது.

 

 

இதற்காக எழுதப்பட்ட சாஸ்திரங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், இது மக்களாக ஏற்படுத்திய வழிபாடாகும். அதுபோல இன்று  கொரோனோ எனும் கொடிய கிருமியால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு பயப்படாமல், திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று கொரோனா தேவி எனும் கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.