ஒரே நொடியில் கொரோனாவை கண்டறியும் முறை.... விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொரோனாவை கண்டறிவதற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பரிசோதனை முறைகளில் முடிவு தெரிவதற்கு சில மணி நேரம் முதல் நாட்கள் வரை ஆகின்றன.

ஆனால் கொரோனாவை மிகவும் வேகமாக அதாவது ஒரே நொடியிலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முறை ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழுவினர் உமிழ் நீர் வழியாக கொரோனாவை கண்டறியும் வகையில் சென்சார் அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். 

இதற்கான பயோ சென்சார் ஸ்ட்ரிப்புகள், தற்போது சர்க்கரை அளவை கண்டறிவதற்காக விற்கப்படும் ஸ்ட்ரிப்புகளின் அளவில் கடைகளில் விற்பனைக்கு வரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது கொரோனா பரிசோதனை முறையில் மிகப்பெரும் சாதனையாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.