தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளது.

இந்நிலையில் நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்க மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு வாரம் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.