துணி மாஸ்க்குகளால் எந்த பலனும் இல்லை... கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள சிறந்த வழி எது? - மருத்துவத்துறை பேராசிரியர் விளக்கம்

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் இப்போது இரட்டை மாஸ்க்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது என்று திருச்சி மருத்துவக்கல்லூரி மைக்ரோ பயாலஜி துறை பேராசிரியர் டாக்டர் தனபால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: மருத்துவத்துறையில் 3 லேயர் மாஸ்க் பயன்படுத்தப்படுகிறது. சிலர் இப்போது கடைகளில் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் மாஸ்க்குகளை பயன்படுத்துகின்றனர். இவற்றில் 3 மடிப்புகள் இருக்கும். ஆனால் இதன் பெயர் 3 லேயர் மாஸ்க் இல்லை.

உண்மையான 3 லேயர் மாஸ்க்கில் முதலில் கண்ணுக்கு தெரியாத நீர்த்தி வலைகளை கட்டுப்படுத்தும் லேயர் இருக்கும். அடுத்து ‘மெல்ட்டு பிளோன்பேப்ரிக்’ என்ற லேயர் இருக்கும். இது நுண்ணுயிரிகளை தடுக்கும். வாய்பகுதியில் அப்சர்வேஷன் மெட்டீரியல் இருக்கும்.

இரட்டை முகக்கவசம்

இது நமது வாயில் இருந்து வெளியேறும் நீர்த்திவலைகள் மற்றும் நுண்ணுயிரிகளை தடுக்கும். இதைத்தான் 3 லேயர் மாஸ்க் என்கிறோம். எண் 95 மாஸ்கில் 5 லேயர்கள் இருக்கும். அதாவது கூடுதலாக 2 லேயர் இருக்கும். இது வைரஸ்கள் நுழையாத வகையில் வடிவ மைக்கப்பட்டிருக்கும்.

மருத்துவத்துறைக்கு பயன்படுத்தும் மாஸ்க்குகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். துணி மாஸ்க்குகளால் எந்த பலனும் இல்லை. அதேசமயம் கடைகளில் விற்பனையாகும் மாஸ்க்குகளை 2 அல்லது 3 என அணிந்து கொள்ளலாம். அப்போதுதான் ஓரளவாவது வைரசில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.