10 ஆண்டுகளாக குடும்பத்தினருக்கு தெரியாமல் காதலியை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்த காதலன்

10 ஆண்டுகளாக பெற்றோருக்கு தெரியாமல் காதலியை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த காதலன்!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான் . அதே ஊரை சேர்ந்த பெண் சாஜிதா. இவர்கள் இருவரும் 
ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா திடீரென மாயமாகி உள்ளார். இது குறித்து சாஜிதாவின் பெற்றோர் 2010 ஆம் ஆண்டில் நெம்மாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

ஆனால், காவல்துறையினர் விசாரணையில் சாஜிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், சாஜிதாவை ரஹ்மான் கடந்த 10 ஆண்டுகளாக தனது சிறிய வீட்டில் மறைத்து வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரஹ்மான், 10 ஆண்டுகளாக சாஜிதாவை ஒரு அறையில் வைத்துப் பாதுகாத்து, அவருக்கு உணவு வழங்கி உள்ளார். 

ரஹ்மான், ஒரு எலக்ட்ரீசியன் என்பதால் தனது அறைக்கு ஒரு சிறப்புப் பூட்டு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தார். அவர் சில மின்சாரக் கம்பிகளை கதவுக்கு வெளியே வைத்து, அவரது குடும்ப உறுப்பினர்களைத் தொடக்கூடாது என்றுக் கூறி இருந்தார். அவரது குடும்பம் அவரது விசித்திரமான நடவடிக்கைகளால் அவருக்கு மனநல பிரச்சினைகள் இருக்கலாம் என எண்ணியுள்ளனர்.

Kerala

இந்நிலையில், 2021  மார்ச் மாதத்தில், யாரும் இல்லாத நேரம் பார்த்து  வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி, பாலக்காட்டில் உள்ள விதானசேரி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்து உள்ளனர்.

இதற்கிடையே, ​​ரஹ்மான் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை எனப் போலீசில்  புகார் அளித்தனர். வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர், ரஹ்மானைக் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் இந்த ஜோடியின் அதிர்ச்சிக் கதை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து சாஜிதா பேசுகையில், "அவர் தனக்குக் கிடைத்த உணவில் பாதியை எனக்குக் கொடுத்தார். அவர் என்னை நன்றாகக் கவனித்து கொண்டார். ஆனால் ஒரு அறையில் தங்குவது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளார். 

இந்த விசித்திரமானக் கதையைப் பற்றி பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இருந்தாலும், இவ்வளவு சிறிய வீட்டில் சாஜிதா இருப்பதைக் குடும்பம் எப்படி அறிந்திருக்கவில்லை என்பதிலிருந்து தொடங்கி, ரஹ்மானும் சாஜிதாவும் ஏன் வெளிப்படையாக வாழ இவ்வளவு காலம் காத்திருந்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒரே வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் தனது காதலியை மறைத்து வைத்திருந்த காதலன் குறித்தான செய்தி வெளியாகி, அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.