மிஷன் மில்க் - ஏழை எளியாருக்கு தினமும் இலவசமாக 150 லிட்டர் பால் வழங்கும் பஞ்சாபி குடும்பத்தினர்

கோவையில் தன்னார்வ அமைப்பினர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் தினமும் 150 லிட்டர் பால் விநியோகம் செய்து வருகின்றனர். 

தன்னார்வ அமைப்பான
( சிந்திபோரம் சிந்திஸ்& சாப் ) சார்பில் மிஷன் மில்க் என்ற பெயரில் ஒவ்வொரு பகுதியாக சென்று முழு ஊரடங்கினால் வறுமையில் வாடும் தினமும் 150  ஏழை குழந்தைகளுக்கு  ஆவின் பால் இலவசமாக கிரன்பஞ்சாபி, சஞ்சை சாப்ரியா,மற்றும்  கிஷன் பஞ்சாபி ஆகியோரின் குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். 

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சென்று தினமும் குடும்பத்தினருடன் பொதுமக்களுக்கு பால் மற்றும் பிஸ்கட் போன்றவை வழங்கி வருகின்றனர். 

இது குறித்து அவர்கள் பேசியபோது கொரோனா மிக மோசமான கால கட்டத்தை எட்டி உள்ளது. இதில் எளிய மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு இந்த பால் வழங்கும் திட்டத்தை நாங்கள் செய்து வருகிறோம். பாலில் நிறைய ஊட்டசத்துகள் உள்ளது. 

ஏழை எளிய மக்களுக்கு உதவுவது மன மகிழ்ச்சியை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது எனவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதை செய்து வருகிறோம். 

மேலும் இப்பணி தொடருவோம் எனவும் தெரிவித்தனர்.