திருமணத்துக்கு கூட்டாமாக வந்த விருந்தாளிகள்.... தவளை போல் தாவச் சொல்லி நூதன தண்டனை கொடுத்த போலீசார்

Wedding Guests End Up Doing Frog Jumps For Lockdown Violation

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கும் 100 பேருக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், பிண்ட் மாவட்டத்தில் உள்ள உமரி என்கிற கிராமத்தில் நடந்த திருமணம் ஒன்றில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி 300க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

போலீசாரை பார்த்ததும் பெரும்பாலானோர் தப்பித்து ஓடிவிட்டார்களாம். சிலரை மடக்கிப்பிடித்த போலீசார். அவர்களை தவளை போல் குதித்து  செல்லச் சொல்லி போலீசார் நூதன தண்டனை கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.