ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்து பசியாற்றும் ஜோசியர்

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு ஒருவர் சிக்கன் பிரியாணி சமைத்து பரிமாறி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ரஞ்சீத், 58-வயதாகும் இவர் ஜோசியர் ஆவார். இவர் தினந்தோறும் 150 நாய்களுக்கு தேவையான உணவை சமைத்து பரிமாறி வருகிறார். பைக்கில் கொண்டு சென்று அவர் பிரியாணியை நாய்களுக்கு உணவளிக்கிறாராம்.

இதுபற்றி அவர் கூறுகையில், நாய்களுக்கு பேச தெரியாது, பசித்தால் உணவு வேண்டும் என்று கேட்கவும் தெரியாது. ஆகையால் அவைகளுக்கு உணவளிப்பது மனிதர்களின் கடமை. வாரத்தில் 3 நாட்கள் இந்த சேவையை செய்து வருகிறேன். நாய்கள் எனது குழந்தை போல பார்க்கிறேன்.

தெரு நாய்களுக்கு சிக்கன் பிரியாணி பரிமாறும் ரஞ்சீத்

என் கடைசி மூச்சு உள்ளவரை இந்த சேவையை தொடர்ந்து செய்வேன். கறியை விட எலும்புகள் தான் அதிகம் வாங்குவேன். எனது சேவையை அறிந்த இறைச்சி கடைக்காரர், அதனை குறைந்த விலைக்கு எனக்கு தருவார். 30 முதல் 40 கிலோ பிரியாணி சமைத்து கொடுத்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.