ரோகித், கோஹ்லியை ஈஸியா அவுட் ஆக்கிடுவேன்.... ஆனா அவர அவுட் ஆக்குறது தான் ரொம்ப கஷ்டம் - பாகிஸ்தான் வீரர் அமீர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான முகமது அமீரை இந்தியர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. ஏனெனில் 2017-ம் ஆண்டு இந்திய அணி மினி உலகக்கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியை தோற்க முக்கிய காரணமாக இருந்தவர் அமீர். இவர் இந்திய அணியின் முதல் விக்கெட்டுகளை மடமடவென வீழ்த்தியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதிலிருந்து மீள முடியாமல் தோல்வியை தழுவியது இந்தியா.

ஸ்டீவ் ஸ்மித்

இந்நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முகமது அமீர், சமீபத்திய பேட்டியில், தான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை எளிதாக அவுட் ஆக்கி விடுவேன் என தெரிவித்துள்ளார். அதே வேளையில் அவுட்டாக்க கடினமான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.