வில்லியம்சன் காயம்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவாரா?

நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

வில்லியன்சன்

இருப்பினும் வருகிற ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியூசிலாந்து அணிக்கு ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது. கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டன் மட்டுமின்றி முன்னணி பேட்ஸ்மேன் ஆகவும் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.